Saturday, June 27, 2009

E-Mailலில் வந்தவை

பக்தன் : கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?


கடவுள் : நல்லா அழகானவளா இருக்கணும். நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்.. பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!


-------------------------------------------------------------------------


ஒரு ஊரில் ஒரு சைவ காதலனும் சைவ காதலியும் இருந்தார்கள்..

காதலி எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்..
65 கி.

குதி உயர் காலணியை அகற்றினாள்..
63 கி.


துப்பட்டாவை காதலனிடம் கொடுத்தாள்....
62 கி.



அத்துடன் கையில் இருந்த சில்லறை தீர்ந்தபடியால் அடுத்து என்ன செய்வதென்றறியாமல் நின்ற போது.. காதலன் சொன்னான்...

கவலைப்படாதே.. அன்பே.. என்கிட்ட 25 நாணயங்கள் இருக்கின்றன...!!!

------------------------------------------------------------------------------------------

ஒரு ஜவுளிக் கடையில் மனைவிகளை தொலைத்துவிட்ட இரு கணவன்மார்..


கணவன் 1 ; உங்க மனைவி எப்படி இருப்பாங்க..?

கணவன் 2 ; சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி.. ஆமாம் உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க..?

கணவன் 1 ; அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன்? வா.. உன் பொண்டாட்டியை தேடுவோம்..!!!


---------------------------------------------------

நன்றி MirZan அவர்கள்

Monday, March 30, 2009

சர்தார் ஜோக்ஸ் - 2

நண்பர் : ஏனய்யா ஒரு காலில் சிவப்புச் செருப்பும் மற்றொரு காலில் கறுப்பு செருப்பும் போட்டிருக்கிறீர்கள். சரியான ஜோடி கிடைக்கவில்லையா?

சர்தார் : (வியப்புடன்) அது தான் தெரியவில்லை நண்பரே. இதேபோன்று மற்றொரு ஜோடி என் வீட்டில் கிடக்கிறது. அது யாருடையதென்று தெரியவில்லை.
----------------------------------------------------------------
நீதிபதி : உங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன். ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா?

சர்தார் : தூக்குதண்டனை தானே… சீக்கிரம் கொடுங்கள். எத்தனை கிலோ தூக்க வேண்டும் என்று சொன்னால், தூக்கிவிட்டு நான்பாட்டுக்கு வீட்டுக்கு நடையைக் கட்டுவேன்.

----------------------------------------------------------------
ஒரு நாய் சர்தாரைத் துரத்திக்கொண்டிருக்கிறது. சர்தார் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்.

நண்பர் : ஏனய்யா…இப்படி ஓடிக்கொண்டிருக்கிறீர். நில்லுமய்யா.

சர்தார் : நான் ஏர்டெல்லுக்கு மாறிவிட்டேன். இருந்தாலும் ஹட்ச் நெட்வொர்க் என்னை ஃபாலோ செய்துகொண்டிருக்கிறது.
----------------------------------------------------------------

சர்தார் ஒரு ஓவியக்கண்காட்சியில் நுழைகிறார்.
சர்தார் : இதென்ன.. பார்க்கவே கோரமா இருக்கே. இதைத்தான் மாடர்ன் ஆர்ட் அப்படினு சொல்றீங்களா?
கண்காட்சி நடத்துபவர் : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடியை, ஓவியத்தை அல்ல.

Wednesday, March 25, 2009

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.



நன்றி சத்தியா அவர்கள்

Friday, March 20, 2009

சர்தார் ஜோக்ஸ்

ஒரு நாள் மாலை கடற்கரையில் சர்தார்ஜி ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ?(Are you relaxing ?) என்று கேட்டார். உடனே சர்தார்ஜி நோ ஐ‘ம் மகேந்தர் சிங் (No, i’m mahendhar Singh) என்றார்.

பிறகு சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற மற்றொருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ? என்றார். கடுப்பான சர்தார்ஜி நோ ஐ‘ம் மகேந்தர் சிங் என்றார் மீண்டும் . பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த சர்தர்ஜி நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒருவரை பார்த்த சர்தார்ஜி அவரிடம் சென்று ஆர் யு ரிலாக்சிங் ? என்று கேட்டார். உடனே அவர் யெஸ் என்றார்.



உடனே சதார்ஜி அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு சொன்னார், ” உன்னை எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! “ என்றார்.

---------------------------------------------------------------------------------------

ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..

" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

"அப்படியா..? எப்படி செத்தார்..?"

" மூளைக் காய்ச்சல்லே...!"

--------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் பெயிண்டர்..( சுண்ணாம்பு அடிக்கறவர்.. ஓவியர் இல்லே..). ஒரு வீட்டுக்காரர் அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார்..

"வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன கேக்கறே..?"

"நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. "

ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. வீட்டுக்காரர் 100 ரூபாய் கொடுத்தார்..சிங்கு திருப்தியுறாமல் கேட்டார்..

"பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க " செவர்லே "ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா
"குவாலிஸ் " நின்னுக்கிட்டுருந்துச்சு..!

--------------------------------------------------------------------------------------

Thursday, March 19, 2009

எனக்கு வந்த SMS

காதல் என்பது ரஜினிகாந்த் மாதிரி
எங்க, எப்ப, எப்படி வருமுன்னு தெரியாது ஆனா..
வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்

ஆனா.. பொண்ணுங்க சத்தியராஜ் மாதிரி
அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது

அதனால நாமவடிவேலு மாதிரி
எதை பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணனும்